This option will reset the home page of Chennai Rulez restoring closed widgets and categories.

Reset Chennai Rulez homepage


SACHIN TENDULKAR 100 @ CHENNAI IS HIS FAVOURITE AND BEST OF HIS CAREER

Master blaster Sachin Tendulkar rated the century he scored in Chennai soon after the 26/11 Mumbai terror attacks, as the best innings of his career. Sachin led India to a famous victory over England in that test match.

Sachin batted under difficult circumstances and in an emotional environment. He scored the century to help India chase 387 runs in the fourth innings and win the Test match against England.

The England team showed great resolve to come back and play a test series in India just a few weeks after the 26/11. They dominated the match for four days, but Sehwag, Gambhir and Tendulkar batted brilliantly to win the match for India on the last day.

Sachin scored an unbeaten hundred, as India registered a six-wicket victory in that test match. Chasing 387 in the fourth innings was not easy, but India did it.Sachin rates Chennai 100 as Best of his Career

மும்பை: “”மும்பை தாக்குதலை தொடர்ந்து சென்னையில் நடந்த டெஸ்டில் விளாசிய சதம் தான், எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்தது,”என, சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். டெஸ்ட்(13, 477 ரன், 47 சதம்), ஒரு நாள் போட்டிகளில் (17, 598 ரன், 46 சதம்) அதிக ரன், அதிக சதம் அடித்து சாதித்துள்ளார். இவர், கடந்த 2008, டிசம்பரில்(11-15) சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், சதம் அடித்து வெற்றி தேடி தந்தார். இதுவே தனது மிகச் சிறந்த சதம் என்கிறார்.

இது குறித்து சச்சின் கூறியது:  சென்னை டெஸ்ட் துவங்குவதற்கு இரண்டு வாரத்துக்கு முன்பு தான் மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல்(நவ., 26) நடந்தது. இந்தச் சூழலில் போட்டிக்கு தயாராவது மிகவும் கடினமான காரியம். பின் அனைத்தையும் மறந்து போட்டியில் கவனம் செலுத்தினோம். 387 ரன்களை சேஸ் வேண்டிய நிலையில் சேவக், காம்பிர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நானும் சதம் அடிக்க, வெற்றி வசப்பட்டது.
பொதுவாக வெற்றி பெறும் போது மைதானத்தின் ஆண் பணியாளர்கள் தான் கைகொடுத்து வாழ்த்து தெரிவிப்பர். ஆனால், அன்றைய தினம் பெண் பணியாளர்கள் எங்களை வாழ்த்தினர். இது தேசத்தின் உணர்வை சுட்டிக் காட்டியது.
டெஸ்ட் வெற்றியால் இழந்த உயிர்களை ஈடு செய்ய முடியாது. ஆனாலும், எங்களை பொறுத்தவரை ஒரு துளி அளவுக்கு இந்திய மக்களின் முகங்களில் புன்னகையை கொண்டு வந்ததில், வெற்றி கண்டோம். அதனால் தான் சென்னையில் அடித்த சதத்தை எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்ததாக கருதுகிறேன்.

கிரிக்கெட் கவனம்: இளம் பருவத்தில் இருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென கனவு கண்டேன். அந்த கனவு நனவாகியுள்ளது. இன்னும் சிறிது காலம் விளையாட தகுதி இருப்பதாக நம்புகிறேன். ஓய்வுக்கு பின் தான் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி நினைப்பேன். தற்போதைக்கு எனது முழு கவனமும் கிரிக்கெட்டில் தான் உள்ளது.

கிரிக்கெட் அரங்கில் 31 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த போதும், எனது முதல் டெஸ்ட் ரன்(1989, எதிர் பாக்.,) பற்றி ஞாபகம் இல்லை. முதல் போட்டி சரியாக அமையாததால், களமிறங்கியது கூட நினைவில் இல்லை. சர்வதேச “டுவென்டி-20′ போட்டிகளில் இருந்து விலகியதற்காக வருத்தப்படவில்லை.

அண்ணன் காரணம்: தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வித சர்ச்சையிலும் சிக்காததற்கு எனது வாழ்க்கை முறை தான் காரணம். மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். சிறப்பாக விளையாடினால் கூட பெரிதாக கொண்டாட மாட்டேன். நான் கிரிக்கெட் விளையாட எனது அண்ணன் அஜித் தான் முக்கிய காரணம். ஒருவேளை சுயசரிதை எழுதினால், முதல் பக்கத்தை எனது குடும்பத்துக்கு ஒதுக்குவேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
————-
“பார்ட்டி’ காரணமல்ல
“டுவென்டி-20′ உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கு, ஐ.பி.எல்., “பார்ட்டிகள்’ தான் காரணம் என தோனி தெரிவித்தார். இதனை மறுத்த சச்சின் கூறுகையில்,”"வீரர்களின் செயல்பாட்டிற்கும் “பார்ட்டிக்கும்’ தொடர்பில்லை. ஒவ்வொருவரும் தங்களது உடல்நிலையை உணர்ந்து, அதற்கேற்ப ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க விரும்புவேன். அதனால் தான் எந்த ஒரு ஐ.பி.எல்., “பார்ட்டியிலும்’ பங்கேற்கவில்லை,”என்றார்.
————–
மகன் விருப்பம்
கிரிக்கெட்டை தேர்வு செய்யும்படி, தனது மகன் அர்ஜுனை ஒருபோதும் நிர்ப்பந்திக்க மாட்டேன் என சச்சின் தெரிவித்தார். இவர் கூறுகையில்,”"கிரிக்கெட் மீது காதல் கொண்டால் மட்டுமே சாதிக்க முடியும். விரும்பிய துறையை தேர்வு செய்ய, அர்ஜுனுக்கு முழு சுதந்திரம் உண்டு ,” என்றார்.
———–
லதா மங்கேஷ்கர் புகழாரம்
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், தனது தந்தை நினைவாக புனேயில் ஆஸ்பத்திரி கட்டியுள்ளார். இதன் விரிவாக்க திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் கலந்து கொண்டார். அப்போது லதா மங்கேஷ்கர் கூறுகையில்,”"சச்சின் உலக அளவில் புகழ் பெற்றவர். அவருக்கு “பாரத ரத்னா’ விருது அளித்தால் மட்டும் போதாது. உலக நாயகன் என்பதை குறிக்கும் வகையில் “விஷ்வரத்னா’ விருது வழங்க வேண்டும்,”என்றார்.
———–
விளம்பரம் வேண்டாம்
“கேன்சர்’ பாதித்த ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்டி தருதல், நண்பன் “ஆப்பரேஷனுக்கு’ 6 லட்ச ரூபாய் உதவி என சச்சினின் சேவை தொடர்கிறது. இது குறித்து அவர் கூறுகையில்,”"கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதனை விளம்பரத்துக்காக செய்யவில்லை. எனது சொந்த திருப்திக்காக செய்கிறேன்,”என்றார்.

Leave a Reply