இலங்கை படவிழா: மம்முட்டி, மோகன்லால் புறக்கணிப்பு
இலங்கை படவிழா: மம்முட்டி, மோகன்லால் புறக்கணிப்பு

இலங்கையில் வருகிற 3, 4, 5ந் தேதிகளில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டில் இவ்விழாவை நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. வேறு நாட்டுக்கு மாற்றும்படியும் வற்புறுத்தப்பட்டன. அது ஏற்கப்படவில்லை.
இதையடுத்து இலங்கை படவிழாவுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் வீடுகளில் முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் இலங்கை பட விழாவுக்கு செல்லக்கூடாது என்றும், மீறி சென்றால் அவர்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தடைவிதிக்கப்படும் என்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இலங்கை படவிழாவில் கலந்து கொள்வதில்லை என்று ரஜினி, கமல் ஆகியோர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டனர். மணிரத்னம் ராவணன் படத்தை இவ்விழாவில் திரையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தற்போது இவ்விழாவுக்கு செல்லவில்லை.
ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இப்படத்துக்கு சிக்கல் வரும் என்பதால் அதில் நடித்த ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் ஆகியோரும் கொழும்பு படவிழாவை புறக்கணித்து விட்டனர்.
மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், திலீப், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, புனித் ராஜ்குமார் ஆகியோரும் இலங்கை விழாவை புறக்கணித்துவிட்டனர்.
அமிதாப்பச்சனும் இவ்விழாவுக்கு போகமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிருத்திக்ரோசன் உள்ளிட்ட சில இந்தி நடிகர், நடிகைகள் மட்டும் இலங்கை விழாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களின் படங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் திரையிட தடைவிதிக்கப்படும்.



Hello! Please e-mail me your contacts. I have a question webmaster@spottovo.ru” rel=”nofollow”>……
Thank you!!!…
Pillspot.org. Canadian Health&Care.No prescription online pharmacy.Special Internet Prices.Pillspot.org. Vitamins@buy.online” rel=”nofollow”>.…
Categories: Stop SmokingAnxiety/Sleep Aid.Skin Care.Mental HealthVitamins/Herbal Supplements.Eye Care.Mens Health.Antidepressants.Antibiotics.Anti-allergic/Asthma.Antidiabetic.Womens Health.Weight Loss.Pain Relief.Stomach.Blood Pressure/Heart.Anti…
Buy:Valtrex.Mega Hoodia.Accutane.100% Pure Okinawan Coral Calcium.Arimidex.Petcam (Metacam) Oral Suspension.Zovirax.Lumigan.Actos.Human Growth Hormone.Retin-A.Prednisolone.Nexium.Synthroid.Zyban.Prevacid….
…
BUY FASHION. TOP BRANDS: GUCCI, DOLCE&GABBANA, BURBERRY, DIESEL, ICEBERG, ROBERTO CAVALLI, EMPORIO ARMANI, VERSACE…